Tuesday 26 November 2013

ஓ இரவே


ஓ இரவே 

என்னுடைய உறவுகளுக்காகவும், உணர்விற்காகவும் பலநாட்கள் என் விழிகள் இமையும் இமையும் கட்டித்தழுவும் சொர்க்கமாம் உறக்கத்தினை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கின்றன ,

பகலில் இருளை தேடி மனிதன் உறங்குவதும் ,இரவில் வெளிச்சம் தேடி விழித்திருப்பதும் ஒரு தனி சுகம்தான் .ஆராய்ந்துப்பார்த்தால் அழகான உண்மை தெரியும் என்பார்கள் அதுபோல முதலில் சூழ்ந்து தெரிந்த இருள் சிறிது நேரம் சிந்தை குடிகொண்டு இருளில் மூழ்க அழகாய் அத்துனையும் ரம்மியமாய் தெரிகிறது பகலும் இரவும் அல்லாமல் தனிப்பட்ட அழகிய உலகம் கண்ணில் பட்டது .அதில் நான் வார்த்தையால் வர்ணிக்க முடியா ஓர் அமைதியான உணர்வை உணர்ந்தேன் .

பகலில் அத்துனை இரைச்சல்களுக்கு மத்தியில் இனிய ஓசையையும் இருகியதாய் நினைக்க வைக்கிறது , ஆனால் இரவு அந்த அழகிய இருளில் ஓர் ஒளி சூழ தெரியும் இரவில் விட்டில் பூச்சிகளும் சின்னஞ்சிறு வண்டுகளும் இடும்
ரீங்காரங்களும் ,பூச்சிகள் இடும் ஓலங்களும் எவ்வளவு இனிமையாய் இதம் தந்து எளிமையாய் செவி வழியாய் இதயம் குடிகொள்கிறது .

இரவில் தெரியும் இருளில் விழித்திருக்கையில் மனம் எங்கோ பறக்கிறது எல்லா சிந்தனைகளும் ஒன்றாகி அமைதி பரப்புகிறது ,பலவண்ணங்கள் ஒன்றாகி கருப்பு உலகுக்குள் கொண்டு சென்று வெண்மை ஒளியை கண்ணில் காட்டுகிறது .

இரவு ஓர் இரண்டாம் உலகம் , அது ஓர் அமைதி பெட்டகம் ,இதமான இனிய பொழுது ,வார்த்தைகளின் வர்ணிப்புக்கும் எட்டாத வானம் ,

பகல் முழுதும் ஓடி உழைத்த மனிதனுக்கு காலை விடியலுக்கு புத்துனர்ச்சி கொடுக்க இப்போது அவனுக்கு தாலாட்டுபாடி சோம்பல் போக்கும் தாய்..இரவின் தாயுள்ளம் எவ்வளவு பெரியது இத்துணை மக்களுக்கும் இருள்தாய் அவளின் தாய்மடி கொடுத்து தூங்க வைக்கிறாளே.

ஓ இரவே
எத்துனை உழைப்பாளிகளை உறங்க வைத்து அயர்வு போக்குகிறாய் காலை எழுந்து உழைக்க சுறுசுறுப்பு கொடுக்கிறாய்.

ஓ இரவே
எத்துனை மழலைகளை அழவைத்து தாயின் தூக்கம்களைத்து தாயின்அன்பை சோதிக்கிறாய்,

ஓ இரவே
எத்துனை கணவன் மணைவிகளை சுகம் காண வைத்து சுகத்துக்குள் மூழ்கடிக்கிறாய்,

ஓ இரவே
எத்துனை காதலர்களை தவிக்க வைக்கிறாய்,

ஓ இரவே
எத்துனை பணிகளை இந்நேரத்திலும் செய்து முடிக்க வைக்கிறாய்.

விசித்திர விஞ்ஞான உலகில் தவழும் அமைதி சித்திரமாய் விளங்கும் இரவே
என்னையும் இந்நேரம் இப்படி சிந்திக்க தூண்டி இப்படி எழுத வைக்கிறாய்
அழகின் வனப்பே , 
அமைதியின் ஊற்றே, 
புது உலகின் புது யுகமே, 
ஓ இரவே. 


(என் முதல் கட்டுரை கவிதையாக எழுத நினைத்தேன் என் எண்ணங்கள் ஒன்றாகி கட்டுரையாய் முடித்தன கவிதையாய் மாற்றம் தர விரும்பினேன் என் மனம் சொன்னது `பிறந்த குழந்தைக்கு (கவிதையாய் ) அலங்காரம் செய்து அழகை ரசித்தாலும்,நிர்வாணம் அதை விட அழகு பிறந்த குழந்தையிடம் மட்டும் `.என்றது எனவே இங்கு என் எண்ணத்தை அப்படியே வடித்துவிட்டேன் பிழை இருப்பின் பொறுத்தருள்க தோழமை நெஞ்சங்களே . )
...கவியாழினி ...

1 comment:

  1. ஓஒ மிக அருமையான இரவு..வாழ்த்துகள்..

    ReplyDelete